Powered By Blogger

Sunday, April 19, 2009

இன்னும் எத்தனை நாளம்மா?

மழை பெய்கிறது.
ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது.
தமிழ் மக்கள், எருமைகளைப்போல, எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள், ஈரத்திலேயே நடக்கிறார்கள், ஈரத்திலேயே உட்கார்ந்திருக்கிறார்கள், ஈரத்திலேயே படுக்கிறார்கள், ஈரத்திலேயே சமையல் உணவு எல்லாம்.
உலர்ந்த தமிழன் மருந்துக்கூட அகப்படமாட்டான்.
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் சத்தியமான வார்த்தைகள்தானே இவை,

இலங்கைத்தமிழர் லட்சக்கணக்கில் கொல்லப்படுவதைக் கண்டு மனம் நொந்து பதிமூன்றாவது நபர் தீக்குளித்து இறந்து போயிருக்கிறார். இந்திய தமிழக உடகங்கள் பக்கத்து வீட்டுக் கிழவன் இறந்ததைப்போல பெட்டி செய்திகூட போடாதது மிகுந்த மனவேதனையளிக்கிறது.

எங்கோ ஒரு சீக்கியனின் குடுமி முடி வெட்டப்பட்டதற்காக இந்தி மக்களின் ஒட்டுமொத்தப்பிரதிநிதி இந்திய நாடாளுமன்ற மக்களவையில் பகிரங்க மன்னிப்புக் கேட்டார். ஒரு தமிழனின் உயிர் சீக்கியனின் மயிரைவிடக் கேவலமானதா?

இந்த தேசத்தில் இதற்கு முன்பு எத்தனையோ போராட்டங்களில் எப்போதும் இத்தனைபேர் தீக்குளித்து மாண்டதாக வரலாறு இல்லை ஏன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போதுகூட இல்லை...........

துங்கியெழுந்த ஒருவர் துதரக உறவைத்துண்டிக்க வேண்டும் என்கிறார்? இல்லையேனில் அவர்களுடன் இவர் உறவைத்துண்டித்துக்கொள்வாரா?

மாற்று அணியினர் நாங்கள் நிரந்தர தீர்வு ஏற்பட ஆவன செய்வோம் என்று உறுதி கூறுகின்றனர், ஆனால் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்க்குள் இலங்கையில் மருந்துக்குக்கூட தமிழன் இருக்கமாட்டான் என்பது தான் ஜீரணிக்கமுடியாத உண்மை?

நாம் இப்படியே பார்த்துக்கொண்டிருக்க வேண்டியது தானா?