Powered By Blogger

Saturday, May 2, 2009

இறுதியில் வெற்றி மக்களுக்கே!


மக்களை அதிக நாட்களுக்கு ஏமாற்ற முடியாது அவர்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாலும் மிகச்சரியாக செயல்படுவார்கள் என்பது மீண்டும் ஒரு முறை நிருபிக்கப்பட்டிருக்கிறது!

தமிழக அரசு எந்த விதமான அறிவிப்பும் இன்றி மாநகராட்சிகளில் “தாள் தள சொகுசுப்பேருந்து“ என்ற பெயராலே கூடுதல் கட்டணம் வசூலிக்கத் துவங்கியது சட்டப்பேரவையில் எதிர் கட்சிகளுக்கு இது பற்றி கேள்வியெழுப்பகூட அனுமதி மறுக்கப்பட்டது.

நாட்கள் சென்றன. அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் தங்கள் எதிர்ப்பையும் மிக மிக அமைதியாகவே காண்பிக்கத்துவங்கினர். அந்தப் பேருந்துகள் வரும்போது மிக மிக அழகாகவும் அமைதியாகவும் விலகி வழிவிட்டனர்.

இன்று அந்த பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்படவே விழி பிதுங்கிய அதிகாரிகளும், அரசும், வேறு வழியே இல்லாமல் பேருந்துக்கட்டணத்தைக் குறைத்திருக்கிறார்கள்.

இபோதும் கூட மாண்புமிகு மதலமைச்சர் அவர்களும், போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களும், நாங்கள் பேருந்துக்கட்டணத்தை ஏற்றவும் இல்லை இறக்கவும் இல்லை என்று அறிக்கை விட்டுக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் உண்மை என்ன என்பது மக்களுக்குத்தெரியும்.

சற்றுமுன் வந்த செய்தி முதலமைச்சர் உடல்நலக்குறைவால் அப்பலோ மருத்துவமனையில், இது உண்மையான செய்தியாய் உண்மையிலேயே இருந்தாலும் அவருக்கு எந்தவிதமான அனுதாபத்தையும் இது தராது. இதுவும் ஒரு நாடகமோ என்றே தோன்றும்.

மக்கள் மந்தையாடுகள் அல்ல அவர்களுக்கு தீவிரமாகவும் செயல்படத்தெரியும் என்பதற்கு இதோ கோவையில் ராணுவம் மீது நடந்த தாக்குதல் இன்னும் ஒரு உதாரணம்.
காவல்துறையிடம் பயப்படும் மக்களுக் ராணுவத்தின் மீது கை வைக்கிற அளவுக்கு தைரியம் அல்லது வெறுப்பு ஏன் ஏற்பபட்டது.
இதிலும் போலி அறிக்கைகள் வரும்,

இன்னல்கள் துவங்கிவிட்டன, அது மக்களுக்கா? அல்லது ஆட்சியாளர்களுக்கா?
இந்தக் கேள்விக்கு காலம் தான் பதில் சொல்லவேண்டும்.